மணமேல்குடி ஊராட்சியில் பனை விதை நடும் நிகழ்ச்சி




மணமேல்குடி ஊராட்சி சார்பில் முத்துராஜபுரம் முதல் கோடியக்கரை வரை சாலை ஓரங்களில் பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அரசமணி (கிராம ஊராட்சி) முன்னிலை வகித்தார். இதனைதொடர்ந்து 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டது. இதில் ஊராட்சி துணை தலைவர் முத்துக்குமார், தாசில்தார் ஷேக் அப்துல்லா, ஊராட்சி செயலாளர் முருகானந்தம் மற்றும் வனத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments