புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் 2 நாட்கள் கடலோர பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை




புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியில் 2 நாட்கள் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. இதில் நேற்று நடந்த ஒத்திகையில் போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளான கட்டுமாவடி, விச்சூர், கோட்டைப்பட்டினம், ஏம்பக்கோட்டை, சேமங்கோட்டை, அரசங்கரை என 6 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து, வாகனத்தின் பதிவு சரியானதாக உள்ளதா என்று சரிபார்த்த பின்னர் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர். கடல் பகுதிகளில் கடலோர காவல் குழுமத்தினர் ரோந்து படகின் மூலம் சென்று கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் மீனவர் அடையாள அட்டை மற்றும் படகு உரிமம் உள்ளதா என்று பரிசோதனை செய்து அனுமதித்தனர். மீனவர்களிடம் சந்தேகம் படும்படி யாரும் மீன்பிடித்தால் உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது. பாதுகாப்பு ஒத்திகையில் போலீசார், கடலோர காவல் குழுமம், வருவாய் துறை, மீன்வளத்துறை, தீயணைப்பு துறையினர் என சுமார் 300 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments