புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பேசினார். மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை கால் உதவி உபகரணங்கள், கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் என மொத்தம் 31 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 91 ஆயிரத்து 600 மதிப்புடைய பல்வேறு உதவி உபகரணங்களை நலத்திட்ட உதவிகளாக வழங்கினார். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை புரிந்து வரும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளையும், சிறப்பு பள்ளிகளில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுகளையும் அவர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், முத்துராஜா எம்.எல்.ஏ., புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் லியாகத் அலி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் கலைவாணி, இணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ஸ்ரீபிரியா தேன்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடுத் திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ரவிசங்கர், தாசில்தார் பரணி, முடநீக்கியியல் வல்லுனர் ஜெகன் முருகன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.