கோபாலப்பட்டிணம் நெடுங்குளத்தில் பல ஆண்டுகளாக அடைப்பட்ட மழை நீர் வரத்து வாய்க்கால் ஜமாஅத் சார்பாக சரிசெய்யப்பட்டு தூம்பு அமைக்கும் பணி




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் ஆண்கள், பெண்கள் குளிப்பதற்காக இரண்டு படித்துறை அமைத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு கோபாலப்பட்டிணம் ஜமாத் சார்பாக குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றினார்கள். தற்போது தண்ணீர் ஆழ்துளை கிணறு மூலமாக குளத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது.சில வருடங்களாக நமது நெடுங்குளத்திற்கு தண்ணீர் வர வேண்டிய மழைநீர் வரத்து வாய்க்கால் அடைப்பட்டு  தண்ணீர் வர வழியில்லாமல் மிகவும் மக்கள் சிரம்மப்பட்டனர். தற்போது நமது ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக மழைநீர் வரவேண்டிய  வாய்க்காலை சரி செய்து தண்ணீர் வருவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது ஜமாத் நிர்வாகத்தின் சார்பாக புதியதாக தண்ணீர் வருவதற்கு சிமெண்ட் தூம்பு  01.12.2024 ஞாயிற்றுக்கிழமை  அன்று ஜேசிபி மூலம் அமைக்கப்பட்டது.ஏற்கனவே தேங்கி உள்ள மழைநீர் வரத்து வாய்க்கால் வழியாக தூம்பு மூலம் நெடுங்குளத்திற்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.இனி வரக்கூடிய காலம் மழைக்காலமாக இருப்பதால் வரத்து வாய்க்கால் வழியாக தூம்பு மூலம்  நெடுங்குளத்திற்கு தண்ணீர் வந்து நிரம்பிவிடும் என மக்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளார்கள். 
இதற்காக முயற்சி செய்து தண்ணீர்  வரவழைத்த ஜமாத் நிர்வாகத்திற்கும், கமிட்டியாளர்களுக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments