புதுக்கோட்டையில் 3 புதிய அரசு பஸ்கள் சேவை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார்




புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 3 புதிய பஸ்கள் சேவை தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடியசைத்து பஸ்கள் சேவையை தொடங்கி வைத்தார். அறந்தாங்கியில் இருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கும், புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கும், பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் வழியாக ராமேசுவரத்திற்கும் என 3 புதிய வழித்தட பஸ் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் முகமது நாசர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments