புதுக்கோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் கவியரசன் (வயது 20). முள்ளூர் பகுதியை சேர்ந்த ரெத்தின சபாபதியின் மகன் மணிகண்டன் (20). இவர்கள் இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் சென்ற போது பழைய கந்தர்வகோட்டை பஸ் நிறுத்தம் அருகே கார் மோதியது. இதில் கவியரசன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அங்கு நேற்று மருத்துவமனையில் மணிகண்டனின் உடலில்இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், தோல் உள்பட 5 உறுப்புகளை மருத்துவக்குழுவினர் தானமாக பெற்றனர். இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை பெற்ற அவரது பெற்றோர், உறவினர்கள் நேற்று மாலை புதுக்கோட்டை அருகே முள்ளூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அரசு சார்பில் புதுக்கோட்டை ஆர்.டி.ஒ. ஐஸ்வர்யா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறந்த மணிகண்டனின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.