ஜெகதாபட்டினத்தில் பெண்ணை கத்தியால் குத்திய கணவன் கைது




ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அரபாத் அலி (வயது 40). இவர் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த பாத்திமா கனி (31) என்பவரை 2-வது திருமணம் செய்து உள்ளார். இந்நிலையில் பாத்திமா கனியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முதல் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளார். இந்நிலையில் அங்கு திடீரென பாத்திமா கனி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரபாத் அலி கத்தியை எடுத்து பாத்திமா கனியை குத்தி விட்டு அங்கிருந்து அவர் தப்பி சென்று விட்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பாத்திமா கனியை மீட்டு சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஜெகதாபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அரபாத் அலி ஜெகதாப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments