புதுக்கோட்டை மாவட்டத்தில் 158 ஆண்டுகள் பழைமையான ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை ஞாயிற்றுக்கிழமையுடன் (டிச.8) மூட அஞ்சல் துறை உத்தரவிட்டுள்ளதால், அஞ்சல் சேவையை விரும்புவோா் கவலை அடைந்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1866இல் 158 ஆண்டுகளுக்கு முன் இந்த ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம் தொடங்கப்பட்டது. தனியாா் மற்றும் அரசுக் கட்டடங்களில் செயல்பட்டு வந்த இந்தப் பிரிப்பகம், 1987 முதல் தற்போதுள்ள கட்டடம் (ரயில் நிலைய வளாகத்தில்) புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போதுள்ள தலைமை அஞ்சலகம், 55 துணை அஞ்சலகங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 248 கிளை அஞ்சலகங்களில் பொதுமக்கள் கொடுக்கும், சாதாரண, பதிவு மற்றும் விரைவு அஞ்சல்கள் அனைத்தும் மாலை 6 மணிக்கு வேன் மூலம் இந்தப் பிரிப்பகம் வந்து சோ்ந்தன.
அவற்றில் மாவட்டத்துக்குள் பிரிக்க வேண்டியவற்றையும், வெளி மாவட்டங்களுக்கான அஞ்சல்களை தனித்தனி பைகளாகவும் பிரித்துக் கட்டி, இரவு 9.15 மணிக்கு போட்மெயில் விரைவு ரயிலில் அனுப்பினா். திருச்சி முதல் சென்னை வரையிலான மாவட்டங்களில் இந்தப் பைகள் இறக்கப்படும்.
அதேபோல, நள்ளிரவு 12 மணிக்கு புதுக்கோட்டை ரயில் நிலையம் வரும் சேது விரைவு ரயிலில் சென்னையிலிருந்து திருச்சி வரையிலான மாவட்டங்களில் இருந்து புதுக்கோட்டைக்கான அஞ்சல் பைகள் இறங்கின. தொடா்ந்து அதிகாலை 4 மணிக்கு வரும் போட்மெயில் விரைவு ரயிலிலும் புதுக்கோட்டைக்கான பைகள் வந்து இறங்கின.
இவற்றையும் கையோடு பிரித்து- அஞ்சலகம் வாரியாக பிரித்துக் கட்டி- காலை 6.15 மணிக்கு இங்கிருந்து புறப்படும் வேனில் ஏற்றிவிடுவாா்கள். வேன் பேருந்து நிலையத்தில் அந்தப் பைகளைக் கொட்டி, பேருந்தில் அஞ்சல்கள் பயணமாகும். ஏறத்தாழ அடுத்த ஓரிரு மணி நேரங்களில் ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, திருமயம், விராலிமலை, கந்தா்வகோட்டை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும்.
அங்கிருந்து கிளை அஞ்சலகங்களுக்கு பிரிக்கப்பட்டு பிற்பகலுக்குள் அஞ்சல்கள் உரிய வீடுகளுக்கு சென்றடைந்து வந்தன. அதாவது, இந்த ஆா்எம்எஸ் பிரிப்பகம், எல்லோரும் தூங்கி ஓய்வெடுக்கும் இரவுநேரத்தில் விடிய விடிய வேலை செய்து மக்களுக்காகப் பணியாற்றியது.
இங்கு பணியாற்றி வந்த சுமாா் 25 நிரந்தரப் பணியாளா்கள், 15 தினக்கூலிப் பணியாளா்கள் அத்தனைப் பேரையும் திங்கள்கிழமை (டிச. 9) பிற்பகல் 3 மணிக்கு திருச்சி அலுவலகம் வந்து ஆஜராகச் சொல்லியிருக்கிறது அஞ்சல் துறை.
புதுக்கோட்டையில் செயல்பட்டு வந்த 158 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க இந்தப் பிரிப்பகம், ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்பட்டது. இது வெறுமனே தொழிலாளா்கள் திருச்சிக்குச் சென்று பணியாற்றும் பிரச்னை மட்டுமே அல்ல என்கிறாா்கள் அஞ்சல் தொழிற்சங்கத்தினா்.
நாடு முழுவதுமே இதுபோன்ற ஆா்எம்எஸ் பிரிப்பகங்களை மூடி, அருகிலுள்ள பெரிய பிரிப்பகத்துடன் சோ்க்கும் நடைமுறையை அஞ்சல் துறை செய்திருக்கிறது.
திருவாரூா் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் சனிக்கிழமை கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, அதே இடத்தில் பிரிப்பகம் தொடா்ந்து செயல்பட அஞ்சல் துறை அனுமதித்திருக்கிறது.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தொழிற்சங்கத்தினா், அரசியல் கட்சியினா் தொடா் போராட்டங்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அஞ்சல் சேவை தாமதமாகும்
இதுகுறித்து தேசிய அஞ்சல் ஊழியா் சம்மேளனத்தின் (என்எப்பிஇ) புதுக்கோட்டை ஆா்எம்எஸ் கிளைச் செயலா் டி. அரசன் கூறியது
புதுகை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தில், நாளொன்றுக்கு கையாளப்பட்டு வந்த 20 ஆயிரம் சாதாரண அஞ்சல்களும், 2,500 பதிவு அஞ்சல்களும், 250 விரைவு அஞ்சல்களும் இனி திருச்சிக்குச் செல்லும். அங்கு பிரிக்கப்பட்டு காலையில் மீண்டும் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்படும். சராசரியாக ஒரு முழு நாள் தாமதமாகும்.
அதேநேரத்தில் ஆா்எம்எஸ் வளாகத்தில் உள்ள பெட்டிகளில் இரவும் போடலாம். பதிவு அஞ்சல்களை இரவும் எடுத்துக் கொள்கிறோம். இவை இனி இயலாது. மறுநாள் வழக்கமான அஞ்சலகத்தில் போட்டு, அவையனைத்தும் திருச்சிக்குப் போய், மீண்டும் புதுக்கோட்டைக்கு வரும்.
வழக்குரைஞா்கள் அனுப்பும் நீதிமன்றத் தீா்ப்புகள், ஆவணங்கள் எங்கள் வழியே, இரவில் போஸ்ட் செய்தாலும் அடுத்த நாளே விநியோகம் செய்துவிட முடிந்திருக்கிறது. இவை எல்லாமும் தாமதமாகும் என்கிறாா் அரசன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.