புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே மேம்பாலத்திற்கு நிலம் கையகப்படுத்த ரூ.41.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் அப்துல்லா எம்.பி. பதிவு செய்துள்ளார்.
ரெயில்வே மேம்பாலம்
புதுக்கோட்டை நகரில் இருந்து திருச்சி, ராமேசுவரம் காரைக்குடி போன்ற முக்கிய ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் நகரில் உள்ள இரண்டு ரெயில்வே கேட்டை தாண்டித்தான் செல்ல வேண்டும். இதில் ஒன்று திருச்சி செல்லும் வழியில் உள்ள கருவேப்பிள்ளையான் ரெயில்வே கேட், மற்றொன்று திருவப்பூர் பகுதியில் உள்ள ரெயில்வே கேட். இந்த இரண்டு ரெயில்வே கேட் வழியாக கனரக வாகனம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் திருவப்பூர் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இங்கு குடியிருப்பு பகுதி உள்ளதால் இது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். ரெயில்வே கேட்டு போடும் போது அலுவலகத்திற்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்களுக்கு தாமதம் ஏற்படுகிறது. மேலும் இங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.இந்த ரெயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பல நாட்களாக பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா நாடாளுமன்றத்தில் பேசினார். ரெயில்வே வாரியத்தின் பிங்க் புத்தகம் எனப்படும் புத்தகத்தில் இடம்பெற செய்து ரெயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலையும் பெற்று தந்தார்.
ரூ.41.24 கோடி ஒதுக்கீடு
இதையடுத்து மதுரையிலிருந்து ரெயில்வே அலுவலர்கள் வந்து இடத்தை அளவீடு செய்தும் சென்றனர். அதன்பிறகு, மாநில அரசின் நெடுஞ்சாலைத் துறை மேம்பாலத்துக்கான நிலம் எடுப்பதற்காக தனியாக ஆய்வுகளை மேற்கொண்டு அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியது.
இதன்படி, 6,446 சதுரமீட்டர் நிலம் தனியார் பட்டா நிலம் என்றும், 7,953 சதுர மீட்டர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் வரையறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தனியார் இடத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலை நிலமெடுப்பு சட்டப்படி கையகப்படுத்த ரூ.41.24 கோடி தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அத்துடன், அரசு புறம்போக்கு நிலத்தை உரிய முறைப்படி நிலமாற்றம் செய்யவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் சுமார் 3 மாத காலத்தில் நிறைவடைந்ததும், கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
அரசாணை வெளியீடு
இதுகுறித்து அப்துல்லா எம்.பி. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் ரெயில்வே அமைச்சகம் திருவப்பூர் மேம்பாலம் தொடர்பாக அனைத்து நிர்வாக பணிகளையும் முடித்து உள்ளது. மாநில அரசு நிலமெடுப்பிற்கான அரசாணை வெளியிட்டால் டெண்டருக்கான பணிகளை தொடங்கி விடுவதாக எனக்கு அனுப்பிய தகவலை தெரிவித்தேன்.அதன் தொடர்ச்சியாக முதல்-அமைச்சரை சந்தித்த பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் நிலம் எடுப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டு விட்டது. 2022-ம் ஆண்டு இது குறித்து முதன் முதலில் நாடாளுமன்றத்தில் பேசினேன். அதன் பிறகு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ரெயில்வே பிங்க் புக்கில் இந்த திட்டம் குறித்து இணைக்கப்பட்டது. அது துவங்கி ரெயில்வே மந்திரி அலுவலகம், ரெயில்வே வாரியத் தலைவர் அலுவலகம் என கணக்கற்ற தடவை கடிதங்களோடு அலைந்ததில் தற்போது நிர்வாகப் பணிகள் அனைத்தும் முழுமை பெற்று இருக்கிறது. புதுக்கோட்டை மக்களின் மிக நீண்ட கால கனவு ஒன்று நிறைவேறும் தருவாயில் உள்ளது, என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.