புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் 15 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாத மாதம் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறும். எதிர்வரும் ஜனவரி 5 ஆம் தேதியுடன் கவுன்சிலர்களுடைய பதவி காலம் நிறைவடைகின்ற சூழலில் கடைசி கூட்டம் நேற்று ஆவுடையார்கோவில் யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஆவுடையார்கோவில் ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கருணாகரன், வீரய்யா ஆகிய இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மட்டும் வரவில்லை மற்றபடி 14 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதலில் பேசிய திருப்புனவாசல் கவுன்சிலர் பாண்டி ஆர். ஆர்-ரில் சேர்க்கப்பட்ட இரண்டு சாலைகள் இன்னும் போடாமல் உள்ளது. எனவே உடனடியாக போடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
அதனை அடுத்து மீமிசல் கவுன்சிலர் அய்யா ரமேஷ், மீமிசலில் முக்கிய பகுதிகளை இணைக்க கூடிய பகுதிகளை இணைக்க கூடிய பாப்பான்குட்டை சாலை, வண்ணான் குட்டை சாலை, ஜெய் சாய் நகர் சாலை ஆகிய மூன்று சாலைகளையும் விரைவில் போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஒக்கூர் கவுன்சிலர் அல்லி முத்து ஒக்கூர் உயர்நிலைப் பள்ளிக்கு இன்னும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்றும் இது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம் என்றும் ஆனால் இதுவரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார். கரூர் கவுன்சிலர், பாப்பாக்குடி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மிகவும் சேதமடைந்து உள்ளதாகவும் அதை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் விரைவில் கட்ட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
பொன் பேத்தி கவுன்சிலர் சுந்தரபாண்டியன், கடந்த 50 ஆண்டுகளாக என்னுடைய அப்பா, என்னுடைய பெரியப்பா. மற்றும் என்னுடைய மாமா ஆகியோர் இந்த ஒன்றியத்தில் நீண்டகாலமாக சேர்மனாக இருந்துள்ளார்கள் அதற்கு பிறகு நான் கவுன்சிலராக இப்பொழுது இருந்து வருகிறேன் என்னுடைய காலத்தில் அமைதியான முறையில் நல்லபடியாக கவுன்சிலர் கூட்டம் நிர்வாகம் நடந்துள்ளதாகவும் இதுவரை ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார். அமரடக்கி கவுன்சிலர் உதயம் சரண், கடந்த ஐந்து வருட காலத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மற்றும் உறுதுணையாக இருந்த மற்ற கவுன்சிலர்க்கும். மற்றும் பொதுமக்களுக்கும் நன்றி என்று கூறினார்.
இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், இது கடைசி கூட்டம் இருந்த போதிலும் உங்கள் பதவிகள் முடிவதற்குள் ஜனவரி 5க்குள் நாம் அனைவரும் கூடி ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்த வேண்டும் அதில் அனைவரும் உணவருந்தி செல்ல வேண்டும் என்றும், இதுவரை ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து கவுன்சிலருக்கும் நன்றி என்றும் கூறினார். இந்த கூட்டம் அதிக விவாதம் இல்லாமல் நன்றி கூறும் விதமாக கூட்டம் நடைபெற்றது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.