கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மருத்துவமனை திறப்புவிழா அழைப்பிதழ்



கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மருத்துவமனை திறப்புவிழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை என்ற அமைப்பு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுக்கா கோபாலப்பட்டினத்தில் GPM மக்கள் மேடை சார்பாக பகுதிநேர மருத்துவமனை மக்கள் மேடை அலுவலகத்தில் நாளை 13.12.2024 காலை 7:00 மணிக்கு ஜமாத்தார்கள் முன்னிலையில் திறக்கப்பட உள்ளது.
முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை தோறும் காலை 8.00 மணி முதல் 9.00 மணி வரை செயல்படும். ஊரில் உள்ள பொது மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நோயாளிகளுக்கு மருத்துவர் கட்டணம் இலவசம் மற்றும் மருந்து மாத்திரைகள் சலுகை விலையில் கொடுக்கப்படும்.

மருத்துவர் Dr.தமீம் அன்சாரி,M.D., (PHYSICIAN) UA, FID (UK )

(பொது மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் சர்க்கரை நோய் நிபுணர்)




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments