வழிபாட்டு தளங்கள் சட்டம் 1991க்கு எதிராக தொடரப்பட்ட மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரனை நடைபெற்றது
அந்த வழக்கின் அடுத்த விசாரணை நடைபெறுவதற்குள் வேறு எந்த ஒரு புதிய மனுக்களையும் இந்த விவகாரத்தில் பதிவு செய்ய அனுமதி கிடையாது எனவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலை தாக்கல் செய்யவும் மனுதாரர் தரப்புக்கு அந்த பதிலை நகல்களை வழங்கும் படியும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
இந்த விவகாரத்தில் ஏராளமான கேள்விகள் கேட்க்ப்பட்டுள்ளது அவை அனைத்தையும் நாங்கள் விசாரிப்போம் எனவும் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 க்கு எதிராக வேறு எந்த நீதிமன்றத்திலும் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யக்கூடாது ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு இருக்கக்கூடிய மனுக்களின் மீது எந்த நீதிமன்றமும் எந்த இறுதி உத்தரமும் பிறப்பிக்க கூடாது. மேலும் மசூதிகள் இருக்கும் இடத்தில், இந்து கோயில்கள் இருந்தது என கூறி புதிதாக தாக்கல் செய்யும் வழக்குகளை எந்த நீதிமன்றமும் விசாரிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனால் வாரணாசி ஞானவாபி மசூதி, மதுரா ஷாகி இதாத் மசூதி , ராஜஸ்தான் அஜ்மீர் மசூதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மசூதிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என இந்து அமைப்புகள் தொடர்ந்து மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் விசாரணையை தொடர இயலாது வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ள நிலையில் மற்ற நீதிமன்றங்களில் இது தொடர்பாக உள்ள அனைத்து வழக்கு விசாரணைகளுக்கும் உச்ச நீதிமன்றம் தடையை விதித்துள்ளது
வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்து, மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி திமுக, விசிக, மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.