புதுக்கோட்டை மாவட்டத்தின், கடற்கரை ஊர்களான கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கு அம்மாப்பட்டிணம், அம்மாபட்டிணம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகி வீடுகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. உணவு சமைக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியில் வந்து தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மேற்படி பதிக்கப்பட்ட பகுதிகளை, TNTJ மாநிலச் செயலாளர்கள் காஞ்சி சித்திக், ரபீக் முகம்மது மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான், மாவட்டச் செயலாளர் முகமது மீரான், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான் ரஹுஃப், ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அந்தந்த கிளை நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு,
இதில் கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கு அம்மாப்பட்டினம் மற்றும் அம்மாப்பட்டினம் ஆகிய ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் என்று நிவாரணப் பொருள்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு TNTJ சார்பாக வழங்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியவும், உரிய நிவாரணங்களை வழங்கியும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது.
இப்படிக்கு,
H.சித்திக் ரகுமான்.,B.E.,
மாவட்டத் தலைவர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ),
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562682.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.