கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட 340 கிலோ கஞ்சாவை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கியூ பிரிவு போலீசார் மற்றும் ஜெகதாப்பட்டினம் போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். மேலும் லாரியில் கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்த காரைக்கால் மேல வாஞ்சூரை சேர்ந்த டிரைவர் சிலம்பரசன் (வயது 37), உரிமையாளர் பிரகாஷ் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெகதாப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் 3 பேர் கைது
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் பகுதியை சேர்ந்த பக்ருதீன் (28), கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மணி, மாரிமுத்து ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கஞ்சாவை படகு மூலம் கடத்த இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- கைதான பக்ருதீனிடம் கஞ்சாவை வாங்கி அனுப்பும் வேலையை மட்டும் செய்ய ஒருவர் கூறியிருக்கிறார். அதன்பிறகு படகு மூலம் இலங்கைக்கு கடத்தி செல்ல மற்றொரு கும்பல் இருந்துள்ளது. கஞ்சாவை கன்டெய்னர் லாரியில் கடத்தி கொண்டு வந்தவர்களுக்கு லாரி வாடகை மற்றும் குறிப்பிட்ட தொகையை கூலியாக பேசி ஆந்திராவில் இருந்து ஒரு கும்பல் அனுப்பி வைத்திருக்கின்றனர். அந்த நபர்கள் யார்? என்பது குறித்தும், இலங்கைக்கு கஞ்சாவை படகில் கடத்த இருந்த கும்பல், அதனை பெற இருந்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த கஞ்சா வழக்கில் சங்கிலி தொடர் போல் பெரிய கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து புலன்விசாரணை செய்து வருகிறோம். விரைவில் மேலும் சிலர் கைதாவார்கள். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.