மணமேல்குடி அருகே தார்சாலை அமைக்கும் பணி அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்




மணமேல்குடியை அடுத்த ஒல்லனூர், பில்லங்குடி வழியாக காரக்கோட்டை இணைப்பு சாலை வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தார்சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியின் மூலம் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ரகுபதி தலைமை தாங்கி, சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், தி.மு.க. தேர்தல் பணிக்குழு செயலாளருமான பரணி கார்த்திகேயன், மணமேல்குடி வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்தி ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள், காரக்கோட்டை ஊராட்சி பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments