மணமேல்குடி, ஆவுடையார்கோவிலில் இறால் பண்ணைகளை பதிவு செய்ய வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மணமேல்குடி மற்றும் ஆவுடையார்கோவில் வட்டங்களில் இறால் பண்ணைகளில் இறால் வளர்த்து வருகின்றனர். இறால் வளர்ப்பு பண்ணைகள் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணைய சட்டம் 2005 திருத்தம், 2023 விதிகள், 2024 பதிவு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலான இறால் பண்ணைகள் பதிவு செய்யப்படாமலும், பதிவு புதுப்பிக்கப்படாமலும் இயங்கி வருகிறது. இது சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே, பதிவு செய்யப்படாத இறால் பண்ணைகள் உடனடியாக புதுக்கோட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்து பதிவு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆகவே, இறால் பண்ணைகளை உரிய காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வரும் இறால் பண்ணைகள் நிறுத்திட சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பதிவு செய்யாமல் மற்றும் பதிவு புதுப்பிக்காமல் இயங்கி வரும் இறால் பண்ணைகளை உடனடியாக பதிவு செய்யும் படியும், பதிவினை புதுப்பிக்கும் படியும் இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments