புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 458 மனுக்கள் பெறப்பட்டன




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 458 மனுக்கள் பெறப்பட்டன.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

கூட்டத்தில் பொதுமக்கள் பலர் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 458 மனுக்கள் குவிந்தன. மனுவை பெற்ற கலெக்டர் அருணா அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

பாராட்டு சான்றிதழ்

மேலும், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்து மதிப்பிலான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

மேலும், இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்றுள்ள மாணவர்கள் சென்னையில் நடத்தப்பெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்குபெற உள்ளனர். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments