மணமேல்குடி அருகே வலையில் சிக்கிய ஆமையை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள்




மணமேல்குடி அருகே வலையில் சிக்கிய ஆமையை மீண்டும் கடலில் பத்திரமாக மீனவர்கள் விட்டனர்.

வன உயிரின பாதுகாப்பு சட்டம்

கடல் வாழ் உயிரினங்களான கடல் ஆமை மற்றும் கடற்பசுக்கள் அழிந்துவரும் இனம் ஆகும். வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி அவை பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது கடல் ஆமை, கடற் பசுக்களை பிடிக்கக்கூடாது எனவும், அவ்வாறு பிடித்தால் கடலில் உயிருடன் விட்டு விட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவ்வாறு வலையில் சிக்கும் கடல் ஆமை, கடற் பசுக்களை கடலில் மீண்டும் விடும் மீனவர்களுக்கு வனத்துறை சார்பில் ஊக்கப்பரிசு வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் ஏனாதி வரையிலா பகுதி கடற்கரையோர பகுதி ஆகும். இப்பகுதிகளில் மீனவர்கள் நாட்டுப்படகுகள், விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

கடல் ஆமை சிக்கியது

இந்த நிலையில் கடல் ஆமைகள் இனப்பெருக்க காலமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களாக கருதப்படுகிறது. இதையொட்டி அவை கடற்கரையோர பகுதிகளுக்கு வர வாய்ப்பு உள்ளது. அவ்வாறு வந்தால் அவற்றை பிடிக்க கூடாது எனவும், கடலில் மீட்டு விடவும் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மணமேல்குடி அருகே சமீபத்தில் நாட்டுப்படகில் கடலில் மீன்பிடிக்க சென்ற போது மீனவர் வலையில் கடல் ஆமை ஒன்று சிக்கியது.அதனை கரையில் வந்த போது மீனவர்கள் பார்த்தனர். அந்த ஆமையை வலையில் இருந்து மீட்டு உயிருடன் கடலில் விட்டனர். அந்த மீனவர்களை அதிகாரிகள் பாராட்டினர். மேலும் ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடல் ஆமைகளை மீறிபிடித்தால் கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments