மணமேல்குடியில் சாராயம் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்




மணமேல்குடியில் கலால் துறை சார்பில் சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாசில்தார் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் கலைஞர்கள், கள்ளச்சாராயம் குறித்து பிரசார பாடலின் மூலம் விளக்கினர். இதில், கள்ளச்சாராயம் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கும், நரம்புத்தளர்ச்சி, கை மற்றும் கால் நடுக்கம் உண்டாகும். பணக் கஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பாகும். உறவினர் சுற்றத்தாரின் உறவுகள் பாதிக்கப்படும், பிள்ளைகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயர் ஏற்படும், குடிப்பழக்கம் குடும்பத்தை சீரழிக்கும், உடல்நிலையை பாதிக்கும் என்ற கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கோட்ட கலால் அலுவலர் பரணி, தனி வருவாய் ஆய்வாளர் முத்தரசு, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கள்ளச்சாரயம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்்படுத்தினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments