முத்துக்குடாவில் அலையாத்தி காடு அமைக்க விதைகள், சவுக்கு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில் தற்போது செடிகள் வளர தொடங்கியுள்ளன.
அலையாத்தி காடு
புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாகும். பாக்ஜலசந்தி கடல் பகுதியையொட்டி அமைந்துள்ளது. மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் காணப்படுகிறது. இதில் கடற்கரை பகுதிகளில் கடல் நீர் உள்ளே புகுந்து விடாமல் இருப்பதற்காகவும் மற்றும் ஆறுகள், கடலில் இணையும் பகுதிகளிலும் ஆங்காங்கே அலையாத்தி காடுகள் காணப்படுகிறது.மேலும் பசுமைமயமாக்கல் திட்டத்திலும், வனப்பரப்பை அதிகரிக்கும் வகையிலும் அலையாத்தி காடுகள் புதிதாக உருவாக்கும் பணியும் நடைபெறுகிறது. இதில் மணமேல்குடி அருகே மும்பாலையில் 45 ஏக்கரில் அலையாத்தி காடு மீன் முள்வடிவில் அமைப்பதற்காக விதைகள் விதைக்கப்பட்டு தற்போது அவை நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன.
விதைகள் விதைப்பு
இதைத்தொடர்ந்து கடற்கரை பகுதியில் முத்துக்குடா சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் அருகே அலையாத்தி காடும் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டது. ஏற்கனவே முத்துக்குடாவில் அலையாத்தி காடுகள் காணப்படுகின்றன. இந்த காடுகளை படகில் சென்று சுற்றுலா பயணிகள் ரசிக்கும் வகையில் படகு குழாம் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் சுற்றுலா தலத்தையொட்டி அதன் அருகே அலையாத்தி காடு புதிதாக அமைப்பதற்காக பாம்பாறு, கடலில் கலக்கும் இடத்தில் வாய்க்கால் வெட்டி, மணல்பரப்பிலும் விதைகள் நடுவதற்கான அமைப்பை ஏற்படுத்தியும் மீன் முள் வடிவில் விதைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடப்பட்டன. இதில் அலையாத்தி மரச்செடிகளும், சுரபுன்னை மர விதைகளும் விதைக்கப்பட்டதில் தற்போது வளரத்தொடங்கின.
சவுக்கு மரக்கன்றுகள்
இதேபோல் முத்துக்குடா கடற்கரை பகுதியில் 25 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட துறையினர் இந்த மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். இதேபோல் அலையாத்தி காடு உருவாவதில் செடிகள் வளர்வதை கண்காணித்து வருகின்றனர். இவை நன்கு வளர்ந்து காடாக உருவான பின்பு அலையாத்தி காடும், சவுக்கு மர தோப்புகளும் ஒரு புதிய அனுபவத்தை ஏற்படுத்தும். பறவைகள் வந்து தங்குவதின் மூலம் பறவையினங்கள் பெருகும். பொதுமக்களும் சுற்றிப்பார்க்கும் வகையில் இயற்கை எழிலாக திகழும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.