புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக பேட்டரி கார் மீண்டும் இயக்கம்




புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி கார் மீண்டும் இயக்கம் தொடங்கியது.

பேட்டரி கார்

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என பொதுமக்களுக்காக பேட்டரி கார் இயக்கப்பட்டது. மருத்துவமனை நுழைவுவாயிலில் இருந்து மருத்துவமனை உள் பகுதியில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் வளாகம் வரை பொதுமக்கள் நடந்து வருவதில் சிரமம் ஏற்படுவதை தடுக்க இந்த பேட்டரி கார் இருந்தது. இதில் இலவசமாக பொதுமக்கள் பயணித்து வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து நுழைவுவாயில் வரையும், அங்கிருந்து மீண்டும் வளாகம் வரையும் இலவசமாக இயக்கப்பட்டது. இந்த பேட்டரி கார் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் இடையில் இந்த பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிலையில் தற்போது இந்த பேட்டரி கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புறநோயாளிகள் பிரிவு பார்வை நேரமான காலை நேரத்தில் மட்டும் இந்த பேட்டரி கார் இயங்குகிறது. காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இயக்கப்படுகிறது.

இதில் டிரைவர் ஒருவர் பணியில் இருந்து இயக்கி வருகிறார். இந்த பேட்டரி கார் சேவை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மாலை வரையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். மதியம் நேரத்திற்கு பிறகும் பார்வையாளர்கள், பொதுமக்கள் வருகை இருப்பதால் இந்த பேட்டரி கார் இயக்கினால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நடந்து செல்வதில் சற்று சிரமம் குறையும்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments