அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தக்கோரி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியம் சுப்பிரமணியபுரத்தில் கலைஞர் கருணாநிதி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக டாக்டர்கள், செவிலியர்கள் யாரும் இல்லை. மேலும் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த அரசு மருத்துவமனையை அறந்தாங்கி தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் நேற்று பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீர்வு காணப்படும்
இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ஸ்ரீபிரியா, தேன்மொழி, அறந்தாங்கி தாசில்தார் கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் எந்தவித சமாதான பேச்சுவார்த்தைக்கும் வர முடியாது என்று கூறினர்.
மேலும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை என்றால் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக உங்களது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து ேபாராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.