அறந்தாங்கி வர்த்தக சங்க உறுப்பினர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் டிட்வா புயல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்சமயம் அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், கட்டுமாவடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்று வானிலைத் துறையின் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த புயல் நிலைமையின் காரணமாக பொதுமக்களுக்கு மருத்துவ உதவி அல்லது அவசரகால ஆம்புலன்ஸ் தேவையென்றால், சேவை நோக்கத்துடன் செயல்படும் அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் ஆம்புலன்ஸை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், தண்ணீர் அல்லது உணவு தேவைகள் ஏற்பட்டாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த கடின நேரத்தில் மக்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
– தலைவர்,
அறந்தாங்கி வர்த்தக சங்கம் 🙏🙏🙏
அவசர தொடர்பு எண்கள்:
📞 99650 17711
📞 86376 81272
📞 99659 77779
📞 86828 45244
புயல் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.