மீமிசலில் டிசம்பர் 7-ல் மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாம்!



திருச்சியில் உள்ள சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, லயன்ஸ் இன்டர்நேஷனல் (Lions International) அமைப்பின் மீமிசல் லயன்ஸ் சங்கத்துடன் இணைந்து மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ முகாமை நடத்தவுள்ளது.

இந்த முகாம் வரும் டிசம்பர் 7, 2025 அன்று புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டாரா  பகுதியில் உள்ள பொதுமக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
முகாம் விவரங்கள்:
நாள்: 07.12.2025 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: காலை 09:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை
இடம்:நியூ சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விஜய் நகர், மீமிசல்.
 
முக்கிய சிகிச்சைப் பிரிவுகள்:
இந்த முகாமில், ஆண், பெண் இருபாலருக்கும் பொது மருத்துவம் முதல் சிறப்பு சிகிச்சைகள் வரை அனைத்தும் உயர்தர சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. 

*பொது மருத்துவம் (ஆண்/பெண் இருபாலருக்கும்)
 * பொது அறுவை சிகிச்சை
*மகளிர் & மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தை சிகிச்சை
 *எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை
 *மூளை, நரம்பு, முதுகு தண்டுவட சிகிச்சை
 *புற்றுநோய் மருத்துவம்
 
சிறப்பு சலுகை: 15 நாள் முதல் 18 வயதுக்குட்பட்டோர் வரை உள்ள குழந்தைகளுக்கு உதடு, உள் அண்ணம் பிளவுபட்டோருக்கான இலவச அறுவை சிகிச்சை செய்யப்படும்.

✅ இலவச பரிசோதனைகள் மற்றும் சேவைகள்:
 *இலவச பரிசோதனைகள்: ECG, மருந்துகள் (Medicine), மற்றும் USG ஸ்கேன்.
 *அவசர சிகிச்சை: விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள் 24/7 செயல்படும்.
*டயாலிசிஸ்: 24/7 இலவச டயாலிசிஸ் சேவை.
 *பிரசவம்: 24/7 இலவச பிரசவப் பராமரிப்பு.
 
பொதுமக்களுக்கான அறிவிப்பு:
முகாமில் கலந்துகொள்ளும் அனைவரும் தங்களது ஆதார் அட்டையுடன் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 63840 02320, 73395 55995


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments