கோட்டைப்பட்டினம் & காரையூர்: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நாளை (டிசம்பர் 13) இலவச மருத்துவ முகாம்!



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், புதுக்கோட்டை மாவட்டத்தில் இலவச பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவ முகாம், 13.12.2025 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகாம் நடைபெறும் இடம்:
மணமேல்குடி வட்டாரத்தில், கோட்டைப்பட்டினம் MH மெட்ரிக் குலேஷன் பள்ளியிலும், பொன்னமராவதி வட்டாரத்தில், காரையூர் SSR பாலிடெக்னிக் கல்லூரியிலும் முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பொதுமக்களுக்குக் கிடைக்கும் முக்கிய மருத்துவப் பரிசோதனைகள்:
*பொது சுகாதாரச் சேவைகள்:
*உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) கண்டறிதல்.
*எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனை.
*இதய நோய் பரிசோதனை.
*கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான சிகிச்சைகள்.
*சிறப்புப் பரிசோதனைகள்:
*ரத்தப் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை.
*கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை.
*வாய் புற்றுநோய் பரிசோதனை.
*சிறுநீரகப் பரிசோதனை மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற 24 வகையான இரத்தப் பரிசோதனைகள்.

மக்கள் அனைவரும் இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமைப் பயன்படுத்தி, நலம் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments