கட்டுமாவடியில் இன்று (ஜன. 21) மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி கிராமத்தில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

நாள்: 21.01.2026 (புதன்கிழமை)
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம்: PMS திருமண மண்டபம், கட்டுமாவடி.
தலைமை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப.

இந்த முகாமில், பொதுமக்கள் தங்களின் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு தொடர்பான குறைகள், குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. எனவே, கட்டுமாவடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments