ராமலானை வரவேற்கத் தயாராவோம்: ஆர்.புதுப்பட்டினத்தில் இன்று (ஜன.23)சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு



புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் உள்ள பள்ளிவாசலில், புனித ராமலான் மாதத்தை வரவேற்கும் விதமாகச் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

மீமிசல் அருகே உள்ள உப்புளம் ECR அல் மஸ்ஜித் ஹமீத் பள்ளிவாசலில் இந்த மாதாந்திர மார்க்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 23/01/2026 (வெள்ளிக்கிழமை) மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, சரியாக 6:30 மணி அளவில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

இந்த நிகழ்வில், கோபாலப்பட்டினம் இமாம் பெரிய பள்ளிவாசலின் மார்க்க அறிஞர் மெளலவி அப்துல்லா மிஸ்பாஹி அவர்கள் கலந்துகொண்டு, "வாருங்கள் ராமலானை வரவேற்போம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார். இறைவனை வணங்கி அவனது அருளைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து இதில் விளக்கப்படவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பெண்களுக்குத் தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் வசதிக்காக ஆர்.புதுப்பட்டினம் மறைக்கா கடையிலிருந்து மாலை 5:30 மணி முதல் பிரத்யேக வாகன வசதி (Van facility) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த சொற்பொழிவில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments