நாட்டாணி புரசக்குடியில் நாளை (ஜனவரி.26) கிராம சபைக் கூட்டம்: பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு!



புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில்,  நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை  முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

கூட்டம் நடைபெறும் விவரம்
நாள்: 26.01.2026 (திங்கட்கிழமை)
நேரம்: காலை 11.00 மணி
இடம்: நாட்டாணி ஸ்ரீ காளியம்மன் கோவில் அருகில்

விவாதிக்கப்படவுள்ள முக்கிய அம்சங்கள்
இந்தக் கூட்டத்தில் ஊராட்சியின் வளர்ச்சி மற்றும் சுகாதாரம் குறித்த பல்வேறு முக்கியப் பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன:
தூய்மையான குடிநீர்:பொதுமக்களுக்கு தடையின்றி, சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதிப்படுத்துதல்.
டெங்கு தடுப்பு:கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.
தூய்மை பாரத இயக்கம்:கிராமப்புறங்களில் தூய்மை பாரத இயக்கத் திட்டத்தைச் செயல்படுத்துதல்.
ஏரி புதுப்பித்தல்:சிறுபாசன ஏரிகளைப் புதுப்பிப்பது குறித்த விரிவான ஆலோசனைகள்.
ஜல் ஜீவன் திட்டம்:மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல்.

இந்தக் கூட்டத்தில் நாட்டாணி புரசக்குடி கிராம ஊராட்சியின் தனி அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர்.

வேண்டுகோள்
இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கிராமத்தின் வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்பிக்குமாறு தனி அலுவலர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments