மணமேல்குடியில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டமிடல் கூட்டம்: வட்டார கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்



மணமேல்குடி வட்டார வள மையத்தில், மூன்றாம் பருவத்திற்கான ‘எண்ணும் எழுத்தும்’ முன் திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் திரு. செழியன் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது, வரும் மூன்றாம் பருவத்தில் மாணவர்களின் கற்றல் அடைவுகளை மேம்படுத்துவது மற்றும் கற்பித்தல் முறைகளை எளிமைப்படுத்துவது குறித்து அவர் விரிவான ஆலோசனைகளை வழங்கினார்.

வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) திருமதி. சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்து கூட்டத்தினை வழிநடத்தினார். இதில் ஆசிரியர் பயிற்றுநர் திரு. சசிகுமார் மற்றும் ஆசிரியர்கள் திரு. முத்துக்குமார், திருமதி. ஜோதி, திருமதி. சரஸ்வதி, திருமதி. அஸ்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மூன்றாம் பருவத்திற்கான பாடக் குறிப்புகள் தயாரித்தல், கற்றல் கற்பித்தல் உபகரணங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மாணவர்களிடையே வாசிப்பு மற்றும் எழுத்துப் பழக்கத்தை ஊக்கப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. பருவத் தொடக்கத்திலேயே முறையான திட்டமிடலுடன் பணிகளைத் தொடங்குவது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments