நாட்டாணி புரசக்குடி ஊராட்சி கிராம சபையில் கோபாலப்பட்டிணம் வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் நேற்று ஜன.26 நாட்டாணியில் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தில், கோபாலபட்டினம் பகுதியில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைத்தல் மற்றும் புதிய ரேஷன் கடை கட்டுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாட்டாணிபுரசக்குடி ஊராட்சியில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நேற்று காலை 11:00 மணி அளவில் ஊராட்சி செயலாளர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசால் வழங்கப்பட்ட கூட்டப் பொருட்கள் (Agenda) வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

கோபாலப்பட்டிணம் பகுதி கோரிக்கைகள்:
இக்கூட்டத்தில் கோபாலப்பட்டிணம் கிராம மக்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:

முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டம்
கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் ரோட்டில் இருந்து மீரா கறிக்கடை வரை பழுதடைந்துள்ள சாலையை அகற்றி, புதிய சாலை அமைத்துத் தர வேண்டும்.

நிதிக்குழு மானிய சாலை
கடற்கரை ஆலமரத்திலிருந்து ஊற்றுக்குச் செல்லும் சாலை வரை 15-வது நிதிக்குழு மானியத்திலோ அல்லது முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழோ புதிய சாலை அமைக்கப்பட வேண்டும்.

தென்றல் நகர் சிமெண்ட் சாலைகள்
தென்றல் நகரில் உள்ள 9 குறுக்கு சாலைகளும் (தலா 100 மீட்டர் நீளம்) மக்களின் பயன்பாட்டிற்கு ஏதுவாக சிமெண்ட் சாலைகளாக மாற்றப்பட வேண்டும்.

புதிய ரேஷன் கடை
கோபாலப்பட்டிணத்தில் உள்ள ரேஷன் கடை எண் 2 மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

அதிகாரிகள் உறுதி
பொதுமக்களின் கோரிக்கைகளை விரிவாகக் கேட்டறிந்த ஊராட்சி செயலாளர், அடிப்படைத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தார். மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் தீர்மானங்களாகப் பதிவு செய்யப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பங்கேற்பாளர்கள்
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர், தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர், ரேஷன் கடை ஊழியர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments