கோபாலப்பட்டிணம் மக்களே!! வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!




தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப்ரவரி 23) வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா அவர்கள் மாவட்டத்திற்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டார்.

இந்த புதிய தரவுகளின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்று வாங்க பார்ப்போம்...

பாகம் வாரியாக வாக்காளர் விபரம்:

கோபாலப்பட்டிணத்தில் உள்ள நான்கு வாக்குச்சாவடி மையங்களின் (பாகம் எண்கள்) அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை பின்வருமாறு பிரிந்திருக்கிறது:

 
பாகம் 
எண்
ஆண்பெண்மொத்தம்
பாகம் 1605394851,024
பாகம் 161499487986
பாகம் 1625285291,057
பாகம் 163377436813

ஒட்டுமொத்த தொகுப்பு:

கோபாலப்பட்டிணம் பகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை பெண் வாக்காளர்களை விட சற்றே அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த வார்டு வாரியான புள்ளிவிவரங்கள் இதோ:

மொத்த ஆண்கள்: 1,943 

மொத்த பெண்கள்: 1,937

மூன்றாம் பாலினம்: 0

மொத்த வாக்காளர்கள்: 3,880

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் அல்லது இணையதளம் மற்றும் நமது GPM மீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்த்தும், டவுன்லோடு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

பாகம் என் 160 டவுன்லோட் செய்ய 



பாகம் என் 161 டவுன்லோட் செய்ய 




பாகம் என் 162 டவுன்லோட் செய்ய 





பாகம் என் 163 டவுன்லோட் செய்ய 




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 
எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments