மீன்பிடிக்க எல்லை வகுப்பு
கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் சுமார் 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனை நம்பி சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்.
இந்நிலையில் கடற்கரையிலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தொலைவிற்குள் நாட்டுப்படகு மீனவர்களும், அதற்கு மேல் விசைப்படகு மீனவர்களும் மீன் பிடிக்க எல்லை வகுக்கப்பட்டுள்ளது. இதில் 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு உள்ளாக கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடித்ததாக கூறப்படுகிறது.
2-வது நாளாக வேலை நிறுத்தம்
இதனை நாட்டுப்படகு மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் அளித்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட விசைப்படகுகள் மீது மீன்வளத்துறையினர் அபராதம் விதித்து, அவர்களுக்கு அரசு வழங்கும் மானியம், டீசல் ரத்து செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கோட்டைப்பட்டினம் விசைப்படகு சங்கத்தினர், மீன்வளத்துறை அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகக்கூறி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நேற்று முன்தினம் முதல் கடலுக்கு செல்லாமல் உள்ளனர்.
மேலும் அரசு அதிகாரிகள் உரிய தீர்வு எட்டும் வரை போராட்டம் தொடரும் எனவும் அறிவித்தனர். இதனை தொடர்ந்து நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் கோட்டைப்பட்டினம் மீன் வள சங்க கூடத்தில் மீனவர்கள் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம் வாபஸ்
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தகுந்த ஆதாரம் இல்லாமல் விசைப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது அதிகாரி நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் அவரவர் எல்லையை தாண்டி மீன் பிடிப்பது தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் அந்த விசைப்படகு, நாட்டுப்படகு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்ற மீனவர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று நாளை மறுநாள் கடலுக்கு செல்கிகின்றனர்.
கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் மீன்வளத்துறையை கண்டித்து கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல லட்சம் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரையில் உள்ள மீன் ஏலக்கடைகள், கம்பெனிகள் மூடப்பட்டது. மேலும் வியாபாரிகளும் பொதுமக்களும் இல்லாமல் கோட்டைப்பட்டினம் மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.