ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தாழனூர் பாரதி நகரில் சமயபுரத்து மாரியம்மன், ஜெய் ஆஞ்சநேயர் மற்றும் ஏழுமுக காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 30 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர்.
பரிசு
இதையடுத்து மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்ற சாலையில் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர். பாதுகாப்பு பணியில் மீமிசல் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.