ரஷ்யாவில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.3¾ லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
ரூ.2 லட்சம் சம்பளம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆரணிபட்டியை சேர்ந்தவர் ரெங்கசாமி. இவரது மகன் முருகேசன் (வயது 33). இவர் வெளிநாட்டில் வேலை தேடி வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 1 வருடத்திற்கு முன்பு வைத்தி கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முருகேசனிடம் ரஷ்யாவில் மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி ரூ.3 லட்சத்து 85 ஆயிரத்தை அவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து முருகேசனை ரஷ்யாவுக்கு அனுப்புவதாக கூறி அஜர்பைசான் நாட்டில் இறக்கிவிட்டு விட்டு அவர் தலைமறைவாகியுள்ளார்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
பின்னர் தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த முருகேசன் அங்கிருந்து ஊருக்கு திரும்பி உள்ளார். இதையடுத்து முருகேசன் மற்றும் ரெங்கசாமி ஆகிய இருவரும் பணத்தை திருப்பி தருமாறு அந்த நபரிடம் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால் பணத்தை திருப்பி தரவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரெங்கசாமி அந்த நபரின் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அந்த நபர் ரெங்கசாமியை அடித்து துன்புறுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரெங்கசாமி புதுக்கோட்டை மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.