ஆவுடையார்கோவில் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்




ஆவுடையார்கோவில் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

வீட்டில் தீ

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே மின்னாமொழி கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 45). இவர் வெளியூரில் ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு மதியம் வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது அவரது ஓட்டு வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகர் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பொருட்கள் நாசம்

இதையடுத்து தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்து ஓட்டு வீட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த ரேஷன், ஆதார், பான் கார்டு, வங்கி புத்தகம், பொருட்கள் உள்ளிட்டவை அனைத்தும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments