புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சுவரொட்டி ஒட்டுதல்
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பொது மக்களும் தேர்தல் நடத்தை விதிகளைக் கடைபிடித்து, எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்கள், 2026 அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளின்படி, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதியில் பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்தல், சுவரொட்டி ஒட்டுதல், சுவரில் எழுதுதல் ஆகியவை செய்யக்கூடாது. கிராமப் புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு சம்பந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் வகையில், அந்த விளம்பரம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விளம்பரம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களை நடத்தவும், வானங்களைப் பயன்படுத்தவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே கூட்டங்களை நடத்த வேண்டும்.
கண்காணிப்பு குழுக்கள்
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள உரிமம் பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களும் அவர்களது படைக்கலன்களை அவர்களது காவல் எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்குமாறும் ஆணையிடப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 என 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படை குழுக்களும் மற்றும் 18 நிலையான கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவானது 24 மணி நேரமும் இயங்கும். மேலும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணியில் 12 ஆயிரம் அரசு அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அருணா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.