தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்தப்பட்ட குரூப்-2, 2 ஏ போட்டி தேர்வுகளில் முதல்நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வுகளானது கடந்த மாதம் 8-ந்தேதி நடைபெறவிருந்தது. நிர்வாக காரணங்களால் அந்த தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட அத்தேர்வானது நேற்று காலை, மதியம் ஆகிய 2 வேளையாக நடைபெற்றது. அதன்படி இந்த தேர்வினை எழுத புதுக்கோட்டை மாவட்டத்தில் காலையில் 191 பேரும், மதியம் 194 பேரும் தகுதி பெற்றிருந்தனர். அவர்களுக்கான தேர்வு புதுக்கோட்டை எஸ்.எப்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. தேர்வு எழுதும் நபர்கள் செல்போன் உள்ளிட்ட தேர்வாணையத்தால் தடைசெய்யப்பட்ட உபகரணங்களை எடுத்து வர அனுமதிக்கப்படவில்லை. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையில் ஒரு தேர்வும், மற்றொரு தேர்வு மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் நடைபெற்றது.
362 பேர் எழுதினர்
காலையில் 180 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 பேர் தேர்வு எழுத வரவில்லை. மதியம் நடந்த தேர்வினை 182 பேர் எழுதினர். 12 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வினை அறை கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர். தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் தேர்வு மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த துணை கலெக்டர் நிலையில் 1 பறக்கும் படை அலுவலர் மற்றும் தாசில்தார் நிலையில் 1 ஒருங்கிணைப்பாளர் ஆகியோரும் கண்காணித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.