தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது: விவசாயிகள், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் ஒத்திவைப்பு




தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகியவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது. பொதுமக்கள் தங்களின் மனுக்களை அளிக்க வசதியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள் மனு பெட்டியில் தங்களது மனுக்களை செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அருணா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments