மனித எலும்புகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தில் உள்ள ஆட்கள் அதிக நடமாட்டம் இல்லாத பகுதியில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஆடு, மாடுகளை ேமய்த்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சணல் சாக்கு மூட்டை ஒன்று கிடந்தது. மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதைப்பார்த்த அந்த சிறுவர்கள் சணல் சாக்கு மூட்டையை எடுத்து பிரித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனா். சாக்கு மூட்டையில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்துள்ளது. இதையடுத்து சிறுவர்கள் உடனடியாக நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பரபரப்பு
இதற்கிடையே மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் மண்டை ஓடு, எலும்புகள் கிடந்த சாக்கு மூட்டை வாய்க்காலில் காவிரி தண்ணீர் வந்த போது அடித்து வந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் நாகுடி ேபாலீசார் யாரையும் கொலை செய்து சாக்கு மூட்டையில் உடலை வைத்து தூக்கி வீசி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு ேகாணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அறந்தாங்கி அருகே மண்டை ஓடு, எலும்புகள் கிடந்த சாக்குமூட்டையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.