கல்வெட்டு கண்டுபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் மற்றும் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் ஆய்வு மாணவர்கள் விஜயலெட்சுமி, அபினேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் அறந்தாங்கி அருகே நெய்வத்தளியில் உள்ள சிவன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கோவில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தபோது 11-ம் நூற்றாண்டு பராக்கிரம பாண்டியன் கல்வெட்டை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் கூறியதாவது:- இந்த கல்வெட்டு கோச்சடைய பன்மரான திருவாசகர் வட்தன் வீர பராக்கிரம பாண்டியனின் (1153) கல்வெட்டாகும். நெய்வேலி நாதர் கோவிலுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலத்தில் வீட்டுக்கு ஒரு ஆளும் ஒரு ஏறும் சென்று உழவு செய்து கொடுக்க வேண்டும். மீறுபவர்கள் சிறைத்தண்டனை பெறுவார்கள் என்ற செய்தி உள்ளது.
கடுமையான தண்டனை
சிறை சென்றவரை மீட்க சிறைப் பணம் ஒன்று செலுத்த வேண்டும் என்ற செய்திகள் அந்த கல்வெட்டில் உள்ளது. அன்றைய காலத்தில் உழவுத் தொழிலை சிறப்படைய செய்ய மன்னர்கள் கடுமையான தண்டனை விதித்தனர்.
வீட்டுக்கு ஒரு ஆள் போருக்கு வரவேண்டும் என்பது போல், பராக்கிரம பாண்டியன் ஆணைப்படி வீட்டுக்கு ஒரு ஆள், ஒரு ஏர் என்ற முறையில் வேளாண்மை செய்து நாட்டை வளப்படுத்தி உள்ளனர். இது மாதிரியான பழைய பண்பாட்டுச் சின்னங்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.