புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் தேதி நேற்று முன்தினம் மாலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்றும், அதற்கு மாறாக பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்படும் மனுக்கள் பெறும் பெட்டியில் போட்டு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று பொதுமக்கள் பலர் புகார் மற்றும் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை கொண்டு வந்தனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவுவாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெறும் பெட்டியில் அதனை போட்டுச்சென்றனர். 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை போட்டுச்சென்றனர். தேர்தல் முடிந்து மறு அறிவிப்பு வரும் வரையிலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என்றும், அதுவரையிலும் இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.