முத்துக்குடா கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு




அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா நேற்று வர்க்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அந்த வகையில், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் உள்ள 1,12,282 ஆண் வாக்காளர்கள், 1,15,305 பெண் வாக்காளர்கள் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் சேர்த்து மொத்தம் 2,27,588 வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்களித்திடும் வகையில் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில், வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி பிரசாரம் மற்றும் முத்துக்குடா கடற்கரையில் மணல் சிற்பம் அமைத்து வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

பின்னர் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, முத்துக்குடா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோவில் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments