புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டிணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் 3-ஆம் ஆண்டு இரத்ததான முகாம் இன்று (சனிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.
ஜெகதாப்பட்டிணம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, TNTJ மாவட்டத் தலைவர் H. சித்திக் ரஹ்மான் B.E. தலைமை வகித்தார். கிளைத் தலைவர் அப்பாஸ் கான், பொருளாளர் அன்வர் அலி, மற்றும் துணைத் தலைவர் அயூப் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்ய முன்வந்தனர். இதில் மருத்துவத் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து 34 யூனிட் இரத்தம் பெறப்பட்டு, அரசு மருத்துவமனை இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரத்தம் வழங்கிய கொடையாளர்களைப் பாராட்டி, அரசு மருத்துவர் Dr. ஹேமலதா (DCH) அவர்கள் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்வின் நிறைவாக, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபிபுல்லாஹ் நன்றியுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில்: "ஒரு மனிதனை வாழவைத்தவர், உலக மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்" என்ற திருக்குர்ஆனின் உயரிய போதனையை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய சமூகப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.
இந்த முகாமிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்த மருத்துவக் குழுவினருக்கும், இரத்தக் கொடையாளர்களுக்கும், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கும் ஜமாஅத் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.