புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேேபால் இந்த ஆண்டும் இன்று (புதன்கிழமை) முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தங்கள் விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி அதில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.

நிவாரண தொகை

மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன்பிடி இறங்கு தளத்தையொட்டி கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். மேலும் மீனவர்கள் வலையை சரி செய்தல், படகுகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள். மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணமாக தமிழக அரசால் வழங்கப்படும். இந்த நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதால் கடல் மீன்கள் விலை உயர வாய்ப்புள்ளது. கேரளா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கடல் மீன்கள் வரத்து இருக்கும். இதேபோல குளத்து மீன்கள் விற்பனை மும்முரமாக நடைபெறும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments