புதுக்கோட்டை விளையாட்டு மைதானத்தில் 18 வயதிற்குட்பட்டோருக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி தொடங்கியது




18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் தொடங்கியது

பயிற்சி முகாம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதுக்கோட்டை மாவட்டம் சார்பில் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கட்டணமில்லா கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம் நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை இந்த கட்டணமில்லா கோடை கால விளையாட்டு பயிற்சி முகாமினை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குணசேகரன் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி முகாமில் தடகளம், டேக்வாண்டோ, ஹேண்ட் பால், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு அந்தந்த பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பங்கேற்பு சான்றிதழ்

இதில் 18 வயதிற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மேற்கண்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கு காலை, மாலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதி வரை நடக்கிறது. முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பயிற்சி முழுவதும் நிறைவடைந்தவுடன் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் ஆதார் அட்டை நகலை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமுள்ள 18 வயதிற்குட்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் சேர மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments