புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடக்கம் கலெக்டர் ஆய்வு




புதுக்கோட்டையில் தேர்தல் அலுவலர்களுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் மாவட்ட கலெக்டர் அருணா நேரில் ஆய்வு செய்து தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.

வாக்குச்சாவடி மையம்

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 தொடர்பாக தபால் வாக்கு செலுத்த படிவம் 12 பூர்த்தி செய்து கொடுத்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் போலீசார் நேற்று முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை புதுக்கோட்டை மாவட்டத்தின் வாக்காளர்களாக உள்ளவர்கள் தங்கள் வாக்கு உள்ள சட்டமன்றத் தொகுதியின் தாசில்தார் அலுவலகத்திலும், பிற மாவட்டத்தின் வாக்காளர்களாக உள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தாங்கள் பணிபுரியும் சட்டமன்ற தொகுதியிலும் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கத்திலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் தபால் வாக்கு செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றவுள்ள 1,831 போலீசார் மற்றும் 652 இதர அலுவலர்கள் ஆகியோர் தபால் வாக்கினை செலுத்தும் பணியினை, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா நேற்று பார்வையிட்டு, தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்.

வாக்கு எண்ணும் மையம்

அதனைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தில், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளர் (தபால் வாக்கு) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலைகள்/ நிலமெடுப்பு) வடிவேல்பிரபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பிரகாஷ், உதவி இயக்குனர் (நில அளவைத் துறை) பொன்னையன், செயற்பொறியாளர் (பொதுப்பணி துறை) ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் (பொதுப்பணி துறை) ரமேஷ்குமார், உதவி பொறியாளர் (பொதுப்பணி துறை மின் பிரிவு) சிவரஞ்சனி, உதவி பொறியாளர் சுரேந்திரன், புதுக்கோட்டை தாசில்தாரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments