கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி, நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் மே.22 மின்தடை அறிவிப்பு!



மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி, நாகுடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 22.05.2026 வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக கோட்டைப்பட்டினம், அமரடக்கி, ஆவுடையார்கோவில் மற்றும் வல்லவாரி ஆகிய துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு நாளை 22.05.2026 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.

மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் மீமிசல், கோபாலப்பட்டிணம், ஏம்பக்கோட்டை, R.புதுப்பட்டினம், அரசநகரிப்பட்டினம், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டினம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில், ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புனவாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 12.12.2025 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர்கள் தனபால் மற்றும் ஜோசப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அதே போன்று நாகுடி 110/33-11KV துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான நாகுடி, அத்தாணி, தொண்டைமானேந்தல், மேல்மங்கலம், பெருங்காடு, மேலப்பட்டு, தினையாக்குடி, கட்டுமாவடி, வல்லாவரி, அரசர்குளம் மற்றும் சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் நாளை (22.05.2026 - வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறந்தாங்கி நகர் உதவி செயற்பொறியாளர் K.தனபால் தெரிவித்துள்ளார்.

எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் மின் நுகர்வோரும் இந்த மின் நிறுத்தத்தினால் ஏற்படும் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டு, மின்வாரியப் பணிகளுக்குத் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இந்த அறிவிப்பானது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்றும் மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments