தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) புதுக்கோட்டை மாவட்டத்தின் 22-வது மாவட்டப் பொதுக்குழு கூட்டம் இன்று (10.05.2026) காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள மாவட்டத் தலைமையகத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.
தலைமை மற்றும் முன்னிலை
இப்பொதுக்குழுவிற்கு மாநிலச் செயலாளர் அன்சாரி மற்றும் மாநிலச் செயலாளர் முஹம்மது ஒலி MISC ஆகியோர் தலைமை வகித்தனர். மக்தூம் தவ்ஹீதி, மாநிலச் செயலாளர்கள் I.அன்சாரி மற்றும் முகம்மது ஒலி MISC ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கடந்த ஆண்டின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கை, வரவு செலவு அறிக்கை மற்றும் எதிர்கால செயல்திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. சிறப்பாக பணியாற்றிய கிளைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு
பொதுக்குழுவின் முக்கிய நிகழ்வாக மாவட்டத்தின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்வு செய்யப்பட்டனர். அதன் விபரம் பின்வருமாறு:
மாவட்ட தலைவர்: முபாரக் அலி
மாவட்ட செயலாளர்: முகம்மது மீரான்
பொருளாளர்: அப்துல் ரகுமான் ரவூப்
துணை தலைவர்: ரபீக் ராஜா
துணை செயலாளர்கள்: சேக் அப்துல்லா, சைபுல் கரீம், முகம்மது மஃதூம், ரஹ்மத்துல்லா (MISC)
மருத்துவரணி: சபியுல்லா
தொண்டரணி: மீரான் மைதீன்
நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
கூட்டணி ஆட்சி
1.தமிழகத்தின் மக்கள் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை வழங்காத நிலையில் தவெக ஆட்சி அமைக்க விசிக, CPI, CPM, IUML, ஆகிய கட்சிகளின் ஆதரவுகளை பெற்று அமைந்துள்ள கூட்டணி ஆட்சி அனைத்து சமூக மக்களும் பயன் பெறும் வகையில் ஊழலற்ற நல்லாட்சி தர வேண்டும் எனவும் முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்கள் நலன் கருதி தொடர வேண்டும் எனவும் இந்த பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
PM Shree திட்டம்
2.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் அரசு அமைப்பதற்கு முன்னரே PM Shree பள்ளிகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என ஒன்றிய அரசு அழுத்தம் தந்துள்ளது மாநில அரசின் 40% நிதியோடு செயல்படும் இந்த திட்டத்தின் மூலம் பாமர மக்களை வஞ்சிக்கும் தேசிய கல்விக் கொள்கையையும் மும்மொழிக்கொள்கையும் கொண்டு வர முயற்சிக்கும் ஒன்றிய அரசை இந்த பொதுகுழு வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
வாக்குச்சீட்டு முறை
3.ஐந்து மாநில தேர்தல்கள் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கருத்து சொல்ல ஆரம்பித்துள்ளனர், EVM கள் எதிர்க்கட்சியினரிடமும், பெரும்பாலான பொது மக்களிடமும் முழு நம்பிக்யை பெறாத சூழலே தொடர்ந்து நிலவுகிறது, நம்பகத்தன்மை குறித்து எழுப்பப்ட்ட எந்த கேள்விகளுக்கும் சரியான பதிலை தேர்தல் ஆணையம் வழங்காத நிலையில், வாக்கு சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என இந்த பொதுக்குழு வாயிலாக வலியுறுத்துகின்றோம்.
சிலிண்டர் விலையேற்றம்
4.ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு எதிர்பார்த்ததுப் போலவே தேர்தலுக்கு பிறகு வணிக சிலிண்டர் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது, ஏற்கனவே தள்ளாடிக் கொண்டிருக்கும் எளிய ஹோட்டல்கள் முழுமையாக மூடக்கூடிய சூழலை மோடியின் பாஜக அரசு ஏற்படுத்தியுள்ளது, அடுத்து வீட்டு கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் உயர்த்தப்படலாம் என செய்திகள் வருகின்றன, அடித்தட்டு மக்களின் சிரமங்களை குறித்து சிந்திக்காத மோடியின் பாஜக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம், வணிக கேஸ் சிலிண்டர் விலையை குறைப்பதோடு மற்ற விலையேற்றங்களை நிறுத்தி வைக்க வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை இந்த பொதுஇmக்குழு வாயிலாக வலியுறுத்துகின்றோம்.
பிஹார் இமாம் படுகொலை
5.பீஹாரை சார்ந்த தவ்ஸிப் ராஜா மஸ்ஹரி எனும் மதரஸா ஆசிரியர் மற்றும் இமாம் உத்திரப்பிரதேசம் அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார், ரயிலில் பயணிக்கும் போது சக பயணிகளால் தாக்கப்படுவதாகவும் உதவி வேண்டும் என்று அவர் இறுதியாக பேசிய ஆடியோ இன்டெர்நெட்டில் உலவி வருகின்றது, வட மாநிலங்களில் ரயிலில் பயணிக்கும் இஸ்லாமியர்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி உள்ளது, மோடி உள்ளிட்ட பாஜக காரர்களின் முஸ்லிம் வெறுப்பு பேச்சுக்களே இது போன்ற வன்முறைகளுக்கு காரணமாக பார்க்கப்படுகின்றது, ரயிலில் அவரை கடுமையாக தாக்கி படுகொலை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என இந்த பொதுக்குழு வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
முஸ்லிம்களின் இடஒதுக்கீடு
6.தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் மற்ற சமூகங்களை விட பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர் , இஸ்லாமியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிதாக அமைந்துள்ள அரசு இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இப்பொதுகுழு வாயிலாக கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த பொதுக்குழுவில் மாவட்டத்தின் பல்வேறு கிளைகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.