புதுக்கோட்டை மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த அறந்தாங்கி த.வெ.க. எம்.எல்.ஏ.




தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை நகராட்சி தேர்தலில் (தற்போது மாநகராட்சி) 4-வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் முகமது பர்வேஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2023-ல் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது முகமது பர்வேஸ் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் முகமது பர்வேஸ் அறந்தாங்கி தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து தான் ஏற்கனவே வகித்து வந்த மாநகராட்சி கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பினார். இந்த ராஜினாமா கடிதத்தை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஏற்றுக்கொண்டார்.

 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments