சற்றுமுன் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், 95.20 சதவீத மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 93.19 சதவீத மாணவர்களும், 97 சதவீத மாணவிகள் அடங்குவர்.
மாணவிகள் 3.81 சதவீதம் அதிகம் தேர்ச்சி
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவர். அந்த வகையில் கடந்த ஆண்டில் 3.81 சதவீதம் அதிக மாணவிகள் தேர்ச்சி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
மாணவர்கள் தேர்ச்சி – 93.19%
மாணவிகள் தேர்ச்சி – 97%
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: சிறைக் கைதிகள் 238 பேர் தேர்ச்சி
தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்கள் படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதில் 238 பேர் தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 6,171 தனித் தேர்வர்கள் தேர்ச்சி
2025-26ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் மூலம் அல்லாமல் தனியாக, அதாவது டுடோரியல் அல்லது நேரடியாக விண்ணப்பித்து பலர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 6,171 பேர் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளனர்.
பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி சதவீதம் எவ்வளவு?
| பாடம் | தேர்ச்சி சதவீதம் |
| கணினி அறிவியல் | 99.84% |
| வணிகவியல் | 97.55% |
| கணக்குப் பதிவியல் | 98.04% |
| வரலாறு | 97.90% |
| தாவரவியல் | 98.62% |
| விலங்கியல் | 98.69% |
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - 100க்கு 100 எத்தனை பேர்?
| பாடம் | 100க்கு 100 எடுத்தவர்கள் |
| தமிழ் | 83 |
| ஆங்கிலம் | 91 |
| கணிதம் | 732 |
| இயற்பியல் | 105 |
| வேதியியல் | 632 |
| உயிரியல் | 784 |
| கணக்குப் பதிவியல் | 1,946 |
| வணிகவியல் | 683 |
| பொருளியல் | 440 |
| தாவரவியல் | 31 |
| விலங்கியல் | 18 |
| வரலாறு | 282 |
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டன. அதில் 95.20 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் வரும் 13ஆம் தேதி புதன் கிழமை அன்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளிகளில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதிப்பெண் சான்றிதழ் ஜெராக்ஸ் பெற ஏற்பாடு
மே 12 முதல் 16ஆம் தேதி வரை பிளஸ் 2 வகுப்பிற்கான விடைத்தாள்களின் ஜெராக்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். சில மாணவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண்கள் வந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்கள் எந்த பதில்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு, மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க உதவிகரமாக இருக்கும்.
தனித்தேர்வுகள் எழுதுவதற்கான கால அட்டவணை
பிளஸ் 2 மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தால் அவர்கள் ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை நடைபெறும் தனித்தேர்வில் மீண்டும் எழுதி தேர்ச்சி பெற முடியும். இதற்காக உரிய முறையில் தயாராக வேண்டியது அவசியம். இதேபோல் 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் ஜூலை 8 முதல் 16ஆம் தேதி வரை நடத்தப்படும் தனித்தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம்.
பிளஸ் 2 தேர்வில் தோல்வி - தனித்தேர்விற்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
மே 8ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் சிலர் தோல்வியை தழுவியுள்ளனர். இவர்கள் மீண்டும் தேர்வு எழுத பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். உரிய முறையில் விண்ணப்பிக்க மே 18 முதல் ஜூன் 2ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமின்றி பிளஸ் 1 வகுப்பில் தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
மறுமதிப்பீடு/ மது கூட்டலுக்கு எப்போது விண்ணப்பிக்கலாம்?
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்திருக்கலாம். இதனால் மன வருத்தம் அடையாமல் சரியான மதிப்பெண்ணை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மே 5 முதல் 8ஆம் தேதி வரை மறுமதிப்பீடு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விட 0.17% தேர்ச்சி அதிகம்
கடந்த ஆண்டு பொதுத்தேர்வை காட்டிலும் நடப்பாண்டு தேர்ச்சி விகிதம் 0.17 சதவீதம் கூடுதலாக வந்துள்ளது.
கடந்த மார்ச் 2025ல் தேர்வு எழுதியதில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
மார்ச் 2026ல் தேர்வு எழுதியவர்களில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.
பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம் – அரசு பள்ளிகளின் நிலை
மொத்த மேல்நிலைப் பள்ளிகள் எண்ணிக்கை 7,536
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 2,639
95 சதவீதம் தேர்ச்சி பெற்ற மொத்த மேல்நிலைப் பள்ளிகள் 5,170
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகள் 489
95 சதவீதம் தேர்ச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் 1,572
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.